2025 ஜூலை 19, சனிக்கிழமை

காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் ஆரம்பிப்பு வைபவம்

Kogilavani   / 2014 ஜனவரி 15 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் ஆரம்பிப்பு வைபவம் காத்தான்குடி பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவரும் ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபருமான உப்பாலி ஹேவகே மற்றும் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.வை.ஆதம் உட்பட விளையாட்டு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கின் தலைவராக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவு செய்யப்பட்டார். இதில் செயலாளர் மற்றும் பொருளாளர் உப தலைவர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி கால்பந்தாட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான கால்பந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கால்பந்தாட்ட லீக் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசனையுடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த கால்பந்தாட்ட லீக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வருகின்றது.

மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய இரண்டு இடங்களிலும் இந்த லீக் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்னும் கல்குடா மற்றும் ஏறாவூர் ஆகிய இரு இடங்களிலும் கால்பந்தாட்ட லீக் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X