2025 ஜூலை 19, சனிக்கிழமை

கரப்பந்தாட்டப்போட்டியில் மட்டுவில் ஐங்கரன் அணி வெற்றி

Kogilavani   / 2014 ஜனவரி 15 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் முகமாக சாவகச்சேரி லிகோரியார் விளையாட்டுக்கழகத்தினரால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றிக்கிண்ணத்தினை மட்டுவில் ஐங்கரன் விளையாட்டுக்கழகம் தனதாக்கிக்கொண்டது.

கரப்பந்தாட்ட இறுதிச்சுற்றுப்போட்டி சாவகச்சேரி லிகோரியார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (14) நடைபெற்றது.
இதில் மட்டுவில் ஐங்கரன் விளையாட்டுக்கழகமும் சாவகச்சேரி ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகமும் மோதின.

இப்போட்டியில் 5 செட் என தீர்மானிக்கப்பட்ட ஆட்டத்தில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் மட்டுவில் ஐங்கரன் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற மட்டுவில் ஐங்கரன் விளையாட்டுக்கழகத்தின் வீரர்களான எஸ்.சதீஸ் ஆட்ட நாயகனாகவும் எஸ்.வினோ தொடர் ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக  புனித லிகோரியார் ஆலய பங்குத்தந்தை யோசப் பிரான்சிஸ், சாவகச்சேரி நகர பிதா தேவசாகயம்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.

இப்போட்டிகள் கடந்த டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி சாவகச்சேரி லிகோரியார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ். தென்மராட்சி பகுதியிலுள்ள 15 கரப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X