2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுணதீவில் பொங்கல் விளையாட்டு விழா

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


இருநூறுவில் ராஜா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர்,  யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேசமட்ட தைப்பொங்கல் விளையாட்டு விழா  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்களுக்கான  இருபாலாருக்கும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.

ராஜா இளைஞர் கழக ஆலோசகர் இ.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார், உன்னிச்சை பாடசாலை அதிபர் த.விநாயகமூர்த்தி, மண்முனை மேற்கு இணக்கசபை தவிசாளர் வ.புஸ்பாகரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செ.சுசி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி.கிருஸ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X