2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கூடைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கூடைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவரான அருட்தந்தை சகாயநாதன் எஸ்.ஜே தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்டத்துறையை மேம்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தின் சகல கழகங்களும் கலந்துகொண்டன.

மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவராக கடந்த வாரத்தில் அருட்தந்தை சகாயநாதன் எஸ்.ஜே தெரிவு செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெற்ற சங்கத்தின் புனரமைப்புக் கூட்டத்திலேயே இவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
மாவாட்டத்துக்கான கூடைப்பந்தாட்ட தெரிவுக்குழுவொன்றும் தெரிவு செய்;யப்பட்டுள்ளதாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் தெரிவித்தார்.

இதன்போது, உப தலைவர்களாக வி.ஈ.சரவணமுத்து, எஸ்.சுதாகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

செயலாளராக எம்.பி.குகதாசன், உப செயலாளர் வி.பிரதீபன், பொருளாளர் ஜே.என்.கவாஸ்கர் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ரி.பிரசாத், எஸ்.சண்முகேசன், எஸ்.சதீஸ்குமார், ஜே.ஜோன்பிள்ளை, ஏ.சந்துரு, எஸ்.சசிகுமார், டப்ளியூ.விஜயசிறி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X