2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இணைச் சம்பியனாகிய மானிப்பாய் இந்து, சென்.பற்றிக்ஸ் அணிகள்

Super User   / 2014 ஜனவரி 22 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா, சொர்ணகுமார் சொரூபன், எஸ்.குகன்


யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்திய கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் ரசிகர்கள் செய்த குழப்பத்தினால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும் மானிப்பாய் இந்து கல்லூரி அணியும் இணைச் சம்பியனாகத் தெரிவாகின.

யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் 1980ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் கால்ப்பந்தாட்ட போட்டிகள் மற்றும் அஞ்சல் ஓட்ட காணிவேல் விழா ஆகியவற்றினை நடத்தி வந்தது.

தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தச் சங்கம் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு முதல் மீண்டும் யாழ். மாவட்ட பாடசாலைகள் சங்கம் ஆரம்பிக்கத் தொடங்கியதுடன் அதன் தலைவராக மானிப்பாய் இந்து கல்லூரியின் அதிபர் சம்பந்தசரணாலயம் சிவநேஸ்வரன் தெரிவாகினார்.

தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட பாடசாலைகளின் 19 வயது பிரிவு அணிகளுக்கிடையில் கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடத்தியிருந்தது.  தொடர்ந்து 2013ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டு, இவ்வருடம் ஜனவரி 17ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தன.

இதற்கு பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் அனுசரணை வழங்கியது. யாழ். மாவட்ட பாடசாலைகளின் 15 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் சுற்றுப்போட்டிகள் 17ஆம் திகதி மானிப்பாய் இந்து, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெற்றன.

இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மின்னொளியில் மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. முதல் பாதியாட்டம் தொடங்கியது முதல் மானிப்பாய் இந்து அணியின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்ட போதும், சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பின்கள வீரர்களின் சிறப்பான களத்தடுப்பினால் கோல் அடிக்க முடியவில்லை.

முதல் பாதியாட்டம் கோல் எதுவும் பெறாத நிலையில் முடிவடைந்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் கோல் அடிக்கும் நோக்குடன் இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பங்களை ஆக்கிரமித்தன. இதன்போது மானிப்பாய் இந்து அணி வீரர் எஸ்.அகிலன் தனது அணிக்கான முதலாவது கோலினைப் பெற்றுக்கொடுத்தார்.

இருந்தும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் அடுத்த நிமிட ஆட்டங்கள் இருந்தன. இதற்கு பலனாக போட்டியின் 24 ஆவது நிமிடத்தில் சென்.பற்றிக்ஸ் வீரர் ஜெராட் கோலினைப் பெற்றுக்கொடுத்தார். இதனால் போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது.

இதனால் போட்;டி 1:1 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. தொடர்ந்து சம்பியனை தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதையினை போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருந்த வேளை இரு அணிகளின் ரசிகர்கள் மைதானத்திற்கு புகுந்து குழப்பங்களை விளைவித்தனர்.

மைதானம் நுழைந்தவர்களை மானிப்பாய் பொலிஸார் அடக்கினர். இருந்தும் வெற்றிக்கிண்ணத்தினை இணைச் சம்பியனாக இரு அணிகளுக்கும் கொடுப்பது என்று யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

இந்த இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக வட மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கினார்.


  Comments - 0

  • Shanmugaratnam Thursday, 23 January 2014 12:54 PM

    என்னுடை பழைய நாட்களை நினைவு கொண்டன‌...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X