2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கிளித்தட்டு போட்டியின் சிறந்த வீரனாக ச.ராஜு தெரிவு

Kogilavani   / 2014 ஜனவரி 23 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழில் இடம்பெற்ற பொங்கல் விழா கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியின் சிறந்த கிளிதட்டு வீரனாக தாவடி காளியம்மன் விளையாட்டுக்கழகத்தின் ச.ராஜு தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்.மாவட்ட கிளித்தட்டு விளையாட்டுச் சங்கம் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்டத் கிளித்தட்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் இப்போட்டியை நடத்தியிருந்தது.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி திங்கட்கிழமை (21) தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து உடுவில் வைகறை விளையாட்டுக்கழகம் மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியாட்டத்தில் தாவடி காளியம்பாள் வீரர்கள் சிட்டாகச் செயற்பட்டு அடுத்தடுத்து 3 பழங்களைப் பெற்று முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்திலும் ஆதிக்கம், களத்தில் நிலைபெற அவ்வணி மேலும் 3 பழங்களை இரண்டாவது பாதியில் சேர்த்தது.
இறுதியில் தாவடி காளியாம்பாள் விளையாட்டுக்கழகம் 6:0 என்ற பழங்கள் அடிப்படையில் உடுவில் வைகறை அணியினை வென்றது.

இறுதிப்போட்டியின் 'தாச்சியாக' தாவடி காளியம்பாள் அணியின் த.கமலநாதனும், சிறந்த விளையாட்டு வீரனாக' தாவடி காளியம்பாள் அணியின் ச.ராஜூவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்விறுதிப்போட்டியில், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா,  வடமாகாண சபை உறுப்பினரும் விளையாட்டு அமைச்சின் இணைப்பாளருமான இமானுவல் ஆனல்ட், வடமாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி, வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் ராஜா ரணசிங்க, யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஆர்.மோகன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கான பரிசில்களை வழங்கினார்கள்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X