2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

Super User   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் 2014ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது என சங்கத்தின் தலைவர் இ.மனோகரன் இன்று (04) தெரிவித்தார்.

கரப்பந்தாட்ட நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை  யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய தேர்வில் தலைவராக இ.மனோகரனும்  உப தலைவர்களாக சி.அப்புத்துரை, என்.நாகேந்திரன் ஆகியோரும் செயலாளராக நா.சுதேஸ்குமாரும் உப செயலாளராக கே.சயந்தனும் பொருளாளராக எஸ். குமாரசிவமும் நிர்வாக சபை உறுப்பினர்களாக அ.தயாளபாலன், எஸ்.விஜிதரன், எம்.கோமளன், பி.இணோஜன், சி.சிவகணேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X