2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். கால்ப்பந்தாட்ட லீக் அணி வெற்றி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

இலங்கை கால்;ப்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிரேஸ்ட லீக்குகளுக்கிடையில் நடைபெற்று வரும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாண கால்ப்பந்தாட்ட லீக் அணி வெற்றிபெற்றது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற மேற்படி சுற்றுப்போட்டியின் ஆட்டமொன்றில் யாழ்ப்பாண கால்ப்பந்தாட்ட லீக் அணியினை எதிர்த்து வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக் அணி மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியாட்டத்தில் ஒரு கோல் பெற்று யாழ்ப்பாண லீக் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியாட்டம் வலிகாமம் லீக் அணியின் வசமிருக்க அவ்வணி அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்றது.

இருந்தும் இரண்டாவது பாதியாட்டத்தில் இறுதிநேரத்தில் யாழ்ப்பாண லீக்கிற்கு தண்டனை உதை வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற அவ்அணி அதனைக் கோலாக்கியது. இதனால் ஆட்டம் 2:2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க மேலதிக 15 நிமிடங்கள வழங்கப்பட்டது. மேலதிக 15 நிமிடங்களில் யாழ்ப்பாண லீக் அணி அடுத்தடுத்து 3 கோல்களைப் பெற்று அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

வலிகாமம் லீக் அணியினால் பதிலுக்கு 1 கோலினை மாத்திரம் பெறமுடிந்தமையினால், போட்டியில் யாழ்ப்பாண கால்ப்பந்தாட்ட லீக் அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X