2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கல்வளை விநாயகர், மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் அணிகள் வெற்றி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை கால்ப்பந்தாட்ட லீக் தலைவர் வெற்றிக் கிண்ணப் போட்டியில் கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழக அணியும், மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணியும் வெற்றிபெற்றன.

வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக் இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தில் அனுசரணையில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது வலிகாமம் லீக்கிற்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்டது.

விலகல் முறையில் நடைபெற்று வரும் மேற்படி சுற்றுப்போட்டியின் இரண்டு போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (14) இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

முதலாவது போட்டியில் அராலி திருமகள் விளையாட்டுக் கழக அணியினை எதிர்த்து சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழக அணி மோதியது.

இரு அணிகளும் போட்டி நேரம் முடியும் வரையிலும் எதுவித கோலும் அடிக்காத நிலையில் போட்டியின் முடிவு காண சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழக அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் அராலி ஏ.எல் விளையாட்டுக் கழக அணியினை எதிர்த்து மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

இப்போட்டியிலும் இரண்டு அணிகளும் போட்டி முடிவடையும் வரையும் எதுவித கோல்களையும் அடிக்கவில்லை. தொடர்ந்து சமநிலை தவிர்ப்பு உதையில் மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X