2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உலக சாரணர் தினத்தையொட்டி சாரண மாணவர்களின் ஊர்வலம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


உலக சாரணர் தினத்தையொட்டி சனிக்கிழமை (22)  மட்.பட்டிருப்பு கல்வி வயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் பயிலும் சாரண மாணவர்கள் ஒன்றிணைந்து சாரணர் உடையணிந்து களுவாஞ்சிகுடி நகரில் ஊர்வலம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இதன்போது சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பௌவுலின் உருவப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இறுதியில் மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் சாரண மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவி சாரணர் ஆணையார் (ஊடகம்) ஆ.புட்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய சாரண இணைப்பாளர் என்.நாகராஜா மற்றும் சாரண ஆசிரியர்கள், பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைத்தீவு, மண்டூர், கல்லாறு, களுவாஞ்சிகுடி, களுதாவளை போன்ற பல இடங்களிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X