2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வீரர்களின் போர் நாளை ஆரம்பம்

Super User   / 2014 பெப்ரவரி 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா, குணசேகரன் சுரேன்


வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிகளுக்கு இடையிலான 14ஆவது துடுப்பாட்டப் போட்டி நாளை புதன்கிழமை (26) முதல் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்களைக் கொண்ட இரண்டு நாள் போட்டியாக இச்சுற்றுப்போட்டி நடைபெற்று வந்தது.

இதுவரை நடைபெற்ற 13 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 7 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

இறுதியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மகாஜனக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

இம்முறை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி, தலைவர் ஜே.ஜனந்தனின் உபதலைவர் ஈசாரங்கன், ரி.டிலோசன், ஜே.மயூரதன், எஸ்.கஜந்தன், பி.ரிசோத், எஸ்.பிரசாந், எ.நவராஜன்  எம்.பவன், வி.நிஷாந்தன், இரட்ணகுமார், எஸ்.கபிலன், கே.பிரணவன், கே.சிந்துஜன் எஸ்ஜெயராஜ், எஸ்.நிவாஸ், எஸ்.டிணேஸ் ஆகிய வீரர்களுடன் களமிறங்குகின்றது.

அதேவேளை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி, தலைவர் ஜே.ஜனக்சன், உபதலைவர் பி.சுஜிதரன் க.தூவரகன் கே.கதியோன் கே.சயந்தன் பா.பாலபிரசாத் ரி.சரத்குமார் வி.மிதுசாந் எம்.மதுசன் கே.பிரசாத் யூ.ஜெயபிரதாப் எ.றொசான் ரி.நிறோஜன் வி.டிசோத் கே.ரசிகரன் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.

இம்முறை நடைபெறவுள்ள வீரர்களின் போர் துடுப்பாட்ட போட்டியில் மோதுகின்ற இரண்டு அணிகளும் சமபலங்கொண்ட அணிகளாக இருப்பதால் இம்முறை போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X