2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி

Super User   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயது பாடசாலை பிரிவு – 2 அணிகளுக்கிடையிலான போட்டி ஒரு நாள் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் கொழும்பு கோட்டை ஆனந்த சஸ்ராலயா கல்லூரி அணிக்குமிடையிலான போட்டி நேற்று (26) ஆனந்த சஸ்ராலயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 198 ஓட்டங்களால் கொழும்பு கோட்டை ஆனந்த சஸ்ராலயா கல்லூரி அணியை வென்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

எம்.சிந்துராஜன், பி.துவாரகசீலன் ஆகியோரின் துடுப்பாட்டத்தின் உதவியுடன் 50 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 6 இலக்குகளை மாத்திரம் இழந்து 321 ஓட்;டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் எம்.சிந்துராஜன் 106, பி.துவாரகசீலன் 95, ஆர்.பிரிசங்கர் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் சஸ்ராலயா  அணி சார்பாக டி.கர்ஷணா, எச்.ஐஷேக் ஆகியோர் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினர்.

322 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஆனந்த சஸ்ராலயா கல்லூரி அணி, அடுத்தடுத்து இலக்குகளை இழந்து 35 பந்துபரிமாற்றங்களில் 123 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் வை.திரணகம 61, ரி.மடுஹல 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக ஆர்.லோகதீஸ்வரன் 3 (06), ஏ.கானாமிர்தன் 3 (22), எம்.நிலோஜன் 2 (23) இலக்குகளையும் கைப்பற்றினர்.







  Comments - 0

  • 81batch Thursday, 27 February 2014 02:05 PM

    நன்றி சுரேன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X