2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியன்.

Super User   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}




-நா.நவரத்தினராசா, வி.தபேந்திரன்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கினால் இலங்கை கால்பந்தாட்ட லீக் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்காக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற இறுதிப்போட்டியில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகமும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதின.

முதல் பாதி ஆட்டம் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் நவஜீவன்ஸ் அணிக்கு கிடைத்த நேர் உதையினை அவ்வணி வீரர் எஸ்.மணிவண்ணன் தலையால் முட்டி அபாரமாக கோலாக்கினார். அதன் பின் நவஜீவன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

அதன் பலனாக ஆட்டதின் 34ஆவது நிமிடத்தில் நவஜீவன்ஸ் வீரன் கே.பசீலன் தனது அணிக்காக மேலும் ஒருகோலை அடிக்க ஆட்டம் விறு விறுப்படைந்தது. டயமண்ட்ஸ் தொடர்ச்சியாக கோலடிக்க பல முறை முயன்றும் நவஜீவன்ஸ் கள வீரர்களும் கோல் காப்பாளரும் சிறப்பாக செயற்பட்டமையினால் அது முறியடிக்கபட்டது.

இந்நிலையில் ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் டயமண்ட்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி உதையினை அவ்வணி வீரன் எஸ்.அனுராகாந்தன் கோலாக்கினார் இதனால் ஆட்டம் மேலும் விறு விறுப்பானது.

ஆட்ட நிறைவில் நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் 02:01 என்ற கோல் கணக்கில் டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்று தலைவர் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நவஜீவன்ஸ் விளையாட்;டுக் கழக வீரன் எஸ்.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணிகளுக்கான பரிசில்களை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுரடிசில்வா மற்றும் பொதுச் செயலாளர் உபாலிகேவஹே ஆகியோர் வழங்கினார்கள்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X