2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரதேச செயலக பிரிவு கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

Super User   / 2014 மார்ச் 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவு கழகங்களுக்கு இடையிலான மென்பந்து  கிரிக்கெட் போட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிறு (1,2) ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.

5 ஓவர்கள் கொண்ட  இதில் ஆண்கள் பிரிவில் உவர்மலை டைனமிக் விளையாட்டுக் கழகமும் , பெண்க்ள் பிரிவில் ஆத்திமேடு   விக்டறி விளையாட்டக்கழகமும் சம்பியனாகின.

ஆண்களுக்கான 40 கழகங்களுக்கிடையிலான போட்டியின் இறுதிப் போட்டியில் மெர்ட்டிலயன் கழகத்தை எதிர்த்து டைனமிக் கழகம் மோதியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டைனமிக் கழகம் நிர்ணயிக்கிப்பட்ட பந்து பரிமாற்றங்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு களம் புகுந்த மேர்ட்டிலயன் கழகம்  சகல விக்கட்டுக்களையும் இழந்து 41 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.

பெண்களுக்கான 12 கழகங்களுக்கிடையிலான போட்டியின் இறுதிப் போட்டியில் ஜயருக் கழகத்தை எதிர்கொண்ட விக்கடறி  கழகம் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X