2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குச்சவெளி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையில் விளையாட்டு போட்டி

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கல்வி வலயம் குச்சவெளி கோட்டமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான  விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

கோட்ட கல்வி பணிப்பாளர் க.செல்வநாயகம் தலைமையில் சேவைக்கால ஆசிரிய பயிற்சி ஆலோசகர் உடற்கல்வி வினோதா விஜயராஜா இதனை நெறிப்படுத்தி வருகின்றார்.

இப்போட்டிகளில் வலைப்பந்து, கரப்பந்து, காற்பந்து துடுப்பாட்டம் என்பன நிறைவடைந்துள்ளன. கபடி, எல்லே உள்ளக விளையாட்டுப்போட்டிகளும், மெய்வல்லுநர் போட்டிகளும் அடுத்தவாரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

17 வயதுக்கு உட்பட்வர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினை கோபாலபுரம் அ.த.க. பாடசாலையும் இரண்டாம் இடத்தினை குச்சவெளி விவேகாநந்தா மகா வித்தியாலயமும் பெற்றுகொண்டடுள்ளன.

19 வயது வலைப்பந்தாட்டத்தில் முதலாம் இடத்தினை நிலாவெளி கைலேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயமும் இரண்டாம் இடம்கோபாலபுரம் அ.த.க.பாடசாலையும் பெற்றுகொண்டுள்ளன.

15 வயது ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினை குச்சவெளி விவேகாநந்தா மகா வித்தியாலயமும்;, இரண்டாம் இடத்தினை புல்மோட்டை மகா வித்தியாலயமும் பெற்றுகொண்டுள்ளன.

17 வயது புல்மோட்டை மகா வித்தியாலயம். இரண்டாம் இடம் குச்சவெளி விவேகாநந்தா மகா வித்தியாலயம், 19 வயது புல்மோட்டை மகா வித்தியாலயம், இரண்டாம் இடம் குச்சவெளி அந்நூறியா வித்தியாலயமும் பெற்றுகொண்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X