2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கற்கோவளம் உதயதாரகை அணி சம்பியன்

Super User   / 2014 மார்ச் 11 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்

சக்கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்டு வந்த 'வடமராட்சியின் சமர்' என்று அழைக்கப்படும் அணிக்கு 5 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டி திங்கட்கிழமை (10) சக்கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது, உதயதாரகை விளையாட்டுக்கழக அணி 1:0 என்ற கோல் கணக்கில் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழக அணியினை வென்று சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியில் 24 அணிகள் பங்குபற்றியிருந்ததுடன், போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் நடைபெற்று வந்தன.

அதனடிப்படையில் அரையிறுதிப் போட்டிகளில் உதயதாரகை அணி 2:0 என்ற கோல் கணக்கில் மனோகரா விளையாட்டுக்கழக அணியினையும், கொலின்ஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக அணியினையும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இச்சுற்றுப்போட்டியின் தொடர் நாயகனாக உதயதாரகை அணியின் சுரேந்திரன் வாகீசன், இறுதிப்போட்டியின் நாயகனாக அதே அணியின் குயின்தீன் ஜன்சன், சிறந்த கோல் காப்பாளராக கொலின்ஸ் அணியின் எஸ்.நிரோஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X