2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சாவகச்சேரி டிறிபேக் தாரகை விளையாட்டுக்கழக அணி வெற்றி

Super User   / 2014 மார்ச் 21 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அணி மற்றும் டிறிபேக் தாரகை விளையாட்டுக்கழக அணி மோதிக்கொள்ளும் சிநேகபூர்வ இருபது – 20 துடுப்பாட்டப் போட்டி இன்று (21) டிறிபேக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போட்டியில் டிறிபேக் தாரகை அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டிறிபேக் தாரகை அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.பிரதி 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து 186 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அணி 135 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது.

இந்த போட்டியில், சிறந்த பந்துவீச்சாளராக தாரகை அணியின் என்.கண்ணனும், சிறந்த களத்தாடுப்பாளராக டிறிபேக் கல்லூரியின் எஸ்.தனுஜனும், ஆட்டநாயகனாக தாரகை அணியின் எஸ்.பிரவீனும், சகலதுறை விளையாட்டு வீரராக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் எஸ்.லஷ்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபர் க.அருந்தபபாலன், சாவகச்சேரி கைத்தொழில் வணிகமன்றத் தலைவர் வ.சிறிபிரகாஷ், யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் செயலாளர் எஸ்.விமலதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றயீட்டிய வீரர்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள்.









  Comments - 0

  • thas Sunday, 23 March 2014 03:00 PM

    குட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X