2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆசிய விளையாட்டுக்கான கிழக்கு மாகாணக்குழு அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு புதன்கிழமை(2) மாகாணக்குழு அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை விவேகானந்த மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், திருகோணமலை அரசாங்க அதிபர், விளையாட்டு, கல்வித்திணைக்கள பணிப்பாளர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும்  மாகாண மற்றும் வலய விளையாட்டு உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தின்    வேண்டுகோளுக்கு அமைவாக திருகோணமலை நகரத்தில் அமைக்கப்பட்டுவருகின்ற நவின வசதிகளைக்கொண்ட தேசிய விளையாட்டு மைதானத்தினையும் பார்வையிட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X