2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஹொக்கியில் இணைச்சம்பியன்கள் தெரிவு

Super User   / 2014 ஏப்ரல் 06 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

இலங்கை பாடசாலைகள் ஹொக்கிச் சங்கத்தினால் அகில இலங்கை பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு ஹொக்கி அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட ஹொக்கிச் சுற்றுப்போட்டியில் ஆண்கள், பெண்கள் ஆகியவற்றில் இணைச்சம்பியன்கள் தெரிவு செய்யப்பட்டன.

பெண்கள் பிரிவில் கண்டி சீதாதேவி பெண்கள் மகா வித்தியாலயமும் மாத்தளை சங்கமித்த மகளிர் கல்லூரியும், ஆண்கள் பிரிவில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரியும் மாத்தளை விஜய கல்லூரியும் இணைச்சம்பியன்கள் ஆகின.

மேற்படி சுற்றுப்போட்டி யாழ்.வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த 2 ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது.

மேற்படி சுற்றுப்போட்டி தேசிய ரீதியாக 22 ஆண்கள் அணிகளும் 16 பெண்கள் அணிகளும் பங்குபற்றியிருந்தன.

லீக் முறையில் நடைபெற்ற இந்தச் சுற்றுப்போட்டியில் முதல் இரண்டு நாட்களும் தெரிவுப் போட்டிகளும் தொடர்ந்து காலிறுதி மற்றும் அரையிறுதிப்போட்டிகள் இடம்பெற்றது.

தொடர்ந்து சனிக்கிழமை (05) மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் கண்டி சீதாதேவி பெண்கள் மகா வித்தியாலய அணியினை எதிர்த்து மாத்தளை சங்கமித்த மகளிர் கல்லூரி மோதியது.

இரு அணிகளும் போட்டி நேர முடிவு வரையும் எதுவித கோல்களினையும் பெறாமையினால் இரண்டு அணிகளுக்கும் இணைச்சம்பியன் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரி அணியினை எதிர்த்து மாத்தளை விஜய கல்லூரி அணி மோதியது. இரண்டு அணிகளுக்கும் அதிக கோல் அடிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், இரு அணிகளும் அந்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டன.

இறுதிவரை இரு அணிகளும் கோல் எதனையும் பெறாமையினால் இரு அணிகளுக்கும் இணைச்சம்பியன் வழங்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X