2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளன வருடாந்த விளையாட்டு விழா

Super User   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வருடாந்த விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் நடைபெற்றது.

வருடாந்த விளையாட்டு விழாவில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 24 விளையாட்டுக் கழகங்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றியிருந்த நிலையில் உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியும், கழகங்களுக்கு இடையிலான கயிறு இழுத்தல் போட்டியின் இறுதிப் போட்டியும் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கருத்துரை வழங்குகையில்,

'சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் எதிர்கால மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு 1 இலட்சம் ரூபா நிதியுதவியினை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கான தேவைகள், குறிப்பாக நிதி, மைதானம் மற்றும் சம்மேளன தேவைக்காக இடமொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில், மாவட்ட விளையாட்டுத்துறைக்காக பிரத்தியேகமாக ஒருதொகை நிதியினை ஒதுக்கீடு செய்யவுள்ள அதேவேளை, அந்நிதியின் ஊடாக விளையாட்டுத்துறையின் மேம்பாட்டைக்கருத்தில் கொண்டு மாவட்;டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சம்மேளனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான முழுமையான விபரங்களையும் தமக்கு சமர்ப்பிக்குமாறு' யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியினதும், மெய்வல்லுனர் சங்கத்தினதும் தலைவரும், ஆலோசகருமான எஸ்.றமணனிடம் பணிப்புரை விடுத்தார்.

தொடர்ந்து வெற்றிபெற்ற வீர,வீராங்கனைகளுக்கான கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X