2025 ஜூலை 16, புதன்கிழமை

வசந்த கால போட்டிகள் பாஸித் இரண்டாம் இடம்

Super User   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.அஷ்ரப்கான்


நுவரெலியாவில் வசந்த காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் வருடாந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில் களுத்துறை மாவட்டம் தர்ஹா நகரைச் சேர்ந்த பாக்கீர் முஹம்மட் பாஸித் இரண்டாம் இடத்தை (றண்ணஸப்) பெற்றுக் கொண்டார்.

12 சிறந்த போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் 19 வயதான பாஸித் தனது கடின உழைப்பின் காரணமாக இவ்வாறு வெற்றி கொண்டுள்ளமையானது தர்ஹா நகருக்கு பெருமை சேர்த்துள்ளது.

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் வருடாந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காரோட்டப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழைமை (20) நடைபெற்றன.

வெற்றிவாகை சூடிய இவருக்கு தர்ஹா நகர் பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வர்த்தகர்களும் பெரும் வரவேற்பளித்திருந்தனர்.

இவரை உட்சாகப்படுத்தியதில் முதலாமவர் பெந்தோட்டை சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த யோகான் வடுகே என்ற நண்பராகுமென பாஸித் தெரிவித்தார்.

நுவரெலியா பதுளை வீதி காமினி தேசிய பாடசாலை சுற்றுவட்டம் நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி தர்மபால சுற்றுவட்டம் ஆகிய பாதைகளிலேயே இந்த போட்டிகள் நடைபெற்றன.

இலங்கை மோட்டார் ஒட்ட சங்கம் நுவரெலியா மோட்டார் ஒட்ட கழகம் ஆகியன இதனை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையின் பிரபல மோட்டார் சைக்கிள் ஒட்ட வீரர்களான சிராஸ் சாமுவேல், பாக்கீர் முஹம்மட் பாஸித், உதேஸ் வெடிசிங்க, ஜடேன் குணவர்தன, மதுரங்க கல்தேரா, கணேசன் விஜயகுமார், ஆனந்த சம்பத், பிரபாத் பீரிஸ், சேன் மாக், பிரபல காரோட்ட வீரர்களான உபுல் வன் சேரசிங்க, யோகா பெரேரா, உட்பட பல வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X