2025 ஜூலை 16, புதன்கிழமை

சந்தோசபுரம் விளையாட்டுக்கழகத்திற்கு முதலாவது இடம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

மூதூர் கிழக்கு கிறவற்குழி (சந்தோசபுரம்)  ஒலி ஒளி  விளையாட்டுக்  கழகத்தின்  34  ஆம்  ஆண்டு  நிறைவையொட்டியும்,  தமிழ்  சிங்கள  புத்தாண்டை  முன்னிட்டும்    ஒலி ஒளி  விளையாட்டுக்  கழகத்தினால்    நடாத்தப்பட்ட  அணிக்கு  நான்கு  பேர்  கொண்ட    கரப்பந்தாட்டச் சுற்றுப்  போட்டிகள் அண்மையில்  ஒலி ஒலி  விளையாட்டுக்  கழகத்தின்  தலைவர்  திரு. பா.சண்முகநாதனின்  தலமையில்    மின் ஒளியில் நடைபெற்றன. 

இக் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில்   திருகோணமலை  மாவட்டத்திலுள்ள  65   அணிகள்  கலந்து  கொண்டமை  குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில்  முதலாவது இடத்தினை   கிறவற்குழி ஒலி ஒளி விளையாட்டுக்  கழகமும்,  இரண்டாம் இடத்தினை  சம்பூர்  ஸ்ரீகணோசா விளையாட்டுக்  கழமும், மூன்றாம்  இடத்தினை    சல்லி (திருமலை)  உதயசூரியன்  கழகமும், நான்காம்; இடத்தினை தம்பலகமம்  இளந்தென்றல்  விளையாட்டுக்  கழகமும்  வெற்றி பெற்று,  பெறுமதிமிக்க  பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X