2025 ஜூலை 16, புதன்கிழமை

இளவாலை இளஞ்சுடர் சம்பியன்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  நா.நவரத்தினராசா


வலி. வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் இளவாலை இளம்சுடர் விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது.

பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியும், மெய்வல்லுநர் போட்டிகளும் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (03) மல்லாகம் ஸ்ரீ பாஸ்பரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

சனிக்கிழமை(03) நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டி இறுதிப்போட்டியில் பன்னாலை கணேசன் விளையாட்டுக்கழகம் 4:2 என்ற கோல் கணக்கில் இளவாலை சென்.லூட்ஸ் விளையாட்டுக் கழகத்தினை வென்றது.

இதனடிப்படையில் அனைத்துப் போட்டிகளின் சம்பியனாக இளவாலை இளம்சுடர் விளையாட்டுக்கழக அணியும், இரண்டாமிடத்தினை பன்னாலை கணேஸன் விளையாட்டுக்கழக அணியும் பெற்றுக்கொண்டன.

வெற்றிபெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கான வெற்றிக் கேடயங்களை இந்நிகழ்வில் கலந்துகொண்ட யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் வழங்கிவைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X