2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வித்தியானந்தா கல்லூரி அணி வெற்றி

Super User   / 2014 மே 05 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


நண்பர்களின் போர் பெருந்துடுப்பாட்டப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அணி 4 இலக்குகளால் வெற்றிபெற்றது.

யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணிக்கும் முல்லைத்தீவு வித்தியானந்தா அணிக்கும் இடையிலான நண்பர்களின் போர் பெருந்துடுப்பாட்டப் போட்டி  வெள்ளிக்கிழமை (02) முதல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வந்தது.

நாணயச் சுழற்சியில் வென்று கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி முதல் இனிங்ஸில் 46.1 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய வித்தியானந்தா அணி 91 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

தொடர்ந்து 45 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி 85 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

தொடர்ந்து 131 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென களமிறங்கிய வித்தியானந்தா கல்லூரி அணி 6 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

நண்பர்களின் போரின் ஆட்டநாயகனாகவும், சிறந்த துடுப்பாட்ட வீரரராகவும் (47, 69) 116 ஓட்டங்களைப் பெற்ற முகமட் இப்ராஸ் தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X