2025 ஜூலை 16, புதன்கிழமை

ஹொக்கி பயிற்றுநர் பரீட்சையில் நால்வர் சித்தி

Kanagaraj   / 2014 மே 07 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை ஹொக்கிச் சங்கத்தினால் நடத்தப்படும் ஹொக்கி பயிற்றுநர்களிற்கான தரம் 1 பரீட்சையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த நால்வர் சித்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட ஹொக்கிச் சங்கம் இன்று புதன்கிழமை (07) தெரிவித்தது.

எஸ்.றஜீவன் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி டிப்ளோமா பயிற்றுநர்) சி.எ.அரவிந்தன் (யாழ் - சென்.ஜோன்ஸ் கல்லூரி) எஸ்.அனோப்பிரியன் (வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி) ப.தர்மகுமாரன் (உடுவில் மகளிர் கல்லூரி) ஆகிய நால்வருமே சித்தியடைந்துள்ளனர்.

இலங்கை ஹொக்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசியா ஹொக்கிச் சங்கமும் மலேசியா ஹொக்கிச் சங்கமும் இணைந்து கொழும்பு ரொறிங்டன் பிளெசில் வதிவிடப்பயிற்சி நெறியினை நடத்தியது. இதில் இலங்கையைச் சேர்ந்த 34 பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை ஹொக்கிச் சங்கத்தின் தலைவர் சுமிர் எதிரிசிங்க தலைமையில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து எழுத்து மற்றும் செயல் முறைப் பரீட்சைகள் இடம்பெற்றன. இவற்றிலே யாழ்.மாவட்ட பயிற்றுநர்கள் நால்வர் சித்தியடைந்துள்ளதாக ஹொக்கிச் சங்கம் மேலும் தெரிவித்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X