2025 ஜூலை 16, புதன்கிழமை

ஒற்றுமையை பலப்படுத்துவதே விளையாட்டின் நோக்கம்

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


இன, மத, சாதி பேதமின்றி ஒற்றுமையை பலப்படுத்துவதே விளையாட்டின் நோக்கம் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண மட்ட விளையாட்டுப் போட்டி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் சனிக்கிழமை (10) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியானது வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதையிட்டு பெருமகிழ்ச்சி  அடைகின்றேன்.

இவ்விளையாட்டுப் போட்டிகளானது இன, மத, சாதி பேதமின்றி ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் நோக்கமாக உள்ளது.  சில சந்தர்ப்பங்களில் விளையாட்டின்போது மனக் கசப்புக்கள் ஏற்ப்பட்டாலும், அவ்வாறான விடயங்களை மைதானத்துடன் மறந்துவிட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டில் அரசியல் தலையீடுகளை உள்நுழைக்கக்கூடாது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X