2025 ஜூலை 16, புதன்கிழமை

வதிரி டைமன்ஸ் அணி சம்பியன்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன் 


பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை லீக்கின் அனுசரணையில் நடத்திய கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி வதிரி டயமன்ஸ் மற்றும்; வதிரி தோமஸ் அணிகளுக்கிடையில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இப் போட்டியில்   வதிரி டைமன்ஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியில் பருத்தித்துறை லீக்கிற்குட்பட்ட 52 கால்ப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிருந்ததுடன், போட்டிகள் விலகல் முறையில் இடம்பெற்றது.

அரையிறுதியில் வதிரி டைமன்ஸ் அணி 4:1 என்ற கோல் கணக்கில் கரவெட்டி கொலின்ஸ் அணியினையும், வதிரி தோமஸ் அணி 4:1 கோல் கணக்கில் றேஞ்சர்ஸ் அணியும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

முதல்பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்புடன் விளையாடி அடுத்தடுத்து கோல்கள் போட்டன. முதல் பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்கள் பெற்றிருந்தன.

தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டம் உக்கிரமாக இடம்பெற்ற போதும், பின்கள வீரர்களின் சாதுரியத்தினால் கோல்கள் அடிக்கப்படுவது தடுக்கப்பட்டன. இந்நிலையில் வதிரி டயமன்ஸ் அணி ஒரு கோலினைப் பெற்று சமநிலையினைத் தகர்த்தது.
இறுதிவரையிலும் வதிரி தோமஸ் அணி கோல் எதனையும் பெறாததால் வதிரி டயமன்ஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

இறுதிப்போட்டியின் நாயகனாக வதிரி டயமன்ஸ் அணியின் ப.பிரேம்குமார் (2 கோல்கள்) தெரிவு செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, வடமாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் நா.நடராஜசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான வெற்றிக்கேடயங்களை வழங்கினார்கள்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X