2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வடமராட்சியில் இடம்பெறும் கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Super User   / 2014 ஜூன் 08 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்
 
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுசரணையில் யாழ்.மாவட்டக் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றினை தமது கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) முதல் நடத்தி வருகின்றது,
 
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 51 கால்பந்தாட்;ட அணிகள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி வருகின்றன.

இந்தச் சுற்றுப்போட்டியில் கடந்த வியாழக்கிழமை (05) முதல் இடம்பெற்ற போட்டிகளில் முடிவுகள் வருமாறு,
 
வியாழக்கிழமை (05) நடைபெற்ற போட்டிகளில் வல்லை பி அணி 3:1 என்ற கோல் கணக்கில் மைக்கல் அணியினையும், ஆதிசக்கி பி அணி 6:01 என்ற கோல் கணக்கில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக அணியினையும் வென்றன.
 
வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற போட்டிகளில் பொலிகை பாரதி அணி 3:2 என்ற கோல் கணக்கில் நெடியகாடு ஏ அணியினையும், நியூட்டன் அணி 3:0 என்ற கோல் கணக்கில் கழுகுகள் அணியினையும் வென்றன.
 
சனிக்கிழமை (07) இடம்பெற்ற போட்டிகளில் வல்வை ஏ அணி 5:0 என்ற கோல் கணக்கில் கரவைச்சுடர் அணியினையும், றேஞ்சர்ஸ் ஏ அணி 3:1 என்ற கோல் கணக்கில் நவஜீவன்ஸ் அணியினையும், இமையாணன் மத்திய அணி 5:2 என்ற கோல் கணக்கில் றேஞ்சர்ஸ் அணியினையும் வென்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .