2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண மகளிர் கால்பந்தாட்டப் போட்டி

Super User   / 2014 ஜூன் 08 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மகளீர் கால்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை (07) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இறுதிப் போட்டிக்காக மட். கடுக்காமுனை வாணி வித்தியாலய அணியும், மட். தன்னாமுனை புனித வளனார் மகாவித்தியாலய அணியும் தெரிவு செய்யப்பட்டன.

மேற்படி இரண்டு பாடசாலைகளினதும் மகளீர் அணிகளுக்குமிடையில் நடைபெற்ற இறுதிக் கால்பந்தாட்டப் போட்டியில் 02:00 என்ற வித்தில் புள்ளிகளைப் பெற்று மட். கடுக்காமுனை வாணிவித்தியாலய அணி வெற்றிபெற்று பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மகளீர் கால்பந்தாட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

மட்.கடுக்காமுனை வாணி வித்தியாலய அணியினை மாமாங்கம் ஜீவரெத்தினம் ஆசிரியர் பயிற்றுவித்தும், வழிநடாத்தியும் வருகின்றார்.

மட்.கடுக்காமுனை வாணி வித்தியாலய கால்பந்தாட்ட மகளிர் அணி கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஐந்து  வருடங்கள் கால்பந்தாட்ட போட்டியில் முதலிடத்தினை பெற்று வரும் அதேவேளை தேசிய மட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தினையும், 2013 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ள இந்நிலையில் இவ்வருடமும் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .