2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பாரம்பரிய கொம்பு முறி விளையாட்டு ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 11 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து பாரம்பரிய கொம்பு முறி விளையாட்டை நடத்தவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு மகிழடித்தீவு சித்தி விநாயகர் கண்ணகையம்மன் ஆலயத்தில்  புதன்கிழமை (11) காலை போர்த் தேங்காய் உடைத்தலுடன் ஆரம்பமானது.

இதனைத் தெடர்ந்து எதிர்வரும் சனிக்கிழமை (14) காலை 9.30 மணிக்கு முதலாம் விளையாட்டு கொம்பு முறித்தல் நிகழ்வு முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகையம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை (17) காலை 9.30 மணிக்கு இரண்டாம் விளையாட்டு கொம்பு முறித்தல் நிகழ்வு முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, வெள்ளக்கிழமை (20) காலை 9.30 மணிக்கு தாய்க்கொம்பு முறித்தல் நிகழ்வு முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகையம்மன் ஆலயத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .