2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இளைஞர் விளையாட்டு விழா

Kanagaraj   / 2014 ஜூன் 14 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 26 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழா மட்டக்களப்பபு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை(14) ஆரம்பமானது.

இவ்விளையாட்டு விழா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம். எல். எம். என். நைறூஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான  100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர், ஓட்டப்போட்டிகளுடன்; காற்பந்து போட்டிகளும் இடம் பெற்றன.

இப்போட்டிகளில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் பஙகேற்றனர்.

இந்நிகழ்வில், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபையின் உதவி தவிசாளர் எம். எஸ். சுபைர், மாகாணசபை உறுப்பினர் எம். எஸ். அமிர் அலி, மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் வி. பிரசாந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டு உதவிப் பணிப்பாளர் எம்.சமன், மாகாணப் பணிப்பாளர் கே. தவராஜா   ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .