2025 நவம்பர் 19, புதன்கிழமை

இலங்கை வங்கி அணி சம்பியன்

Super User   / 2014 ஜூன் 15 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


- குணசேகரன் சுரேன்


வடமராட்சி வங்கிகளின் சங்கத்தினால், வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள வங்கிகளுக்கிடையில் முதன்முறையாக நடத்தப்பட்ட 5 பந்துபரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 6 பேர் கொண்ட மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டியில் வடமராட்சி இலங்கை வங்கி அணி சம்பியனாகியது.

இறுதிப்போட்டியில் கொமர்ஷல் வங்கியினை 4 இலக்குகளால் வென்றே இலங்கை வங்கி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியில் வடமராட்சிப் பிரதேசத்தினைச் சேர்ந்த 11 வங்கிகளின் அணிகள் பங்குபற்றியிருந்ததுடன், போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்றன.

அரையிறுதிப் போட்டியில் கொமர்ஷல் வங்கி அணி தேசிய சேமிப்பு வங்கியினையும், இலங்கை வங்கி அணி செலான் வங்கி அணியினையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை வங்கி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதற்கிணங்கக் களமிறங்கிய கொமர்ஷல் வங்கி அணி, 5 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 1 இலக்கினை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் து.துவாரகன் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

65 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை வங்கி அணி 3.1 பந்துபரிமாற்றங்களில் 1 இலக்கினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஆ.நிரோஷன் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக இலங்கை வங்கி அணித்தலைவர் ஆ.நிரோஷனும், சுற்றுப்போட்டியின் தொடரின் ஆட்டநாயகனாக கொமர்ஷல் வங்கியின் சு.கிரிதரனும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீரர்களிற்கான பரிசில்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடப் பேராசிரியா நா.நடராஜசுந்தரம் வழங்கினார்.





  Comments - 0

  • thuvarakan Sunday, 15 June 2014 02:37 PM

    அருமையான ஓர் அனுபவம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X