2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

Super User   / 2014 ஜூன் 15 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஏறாவூர் சமூக மேம்பாட்டுக்கும் வலுவூட்டலுக்குமான நிறுவனத்தின் தலைவரும் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம்.நஸீரினால் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கான ஒரு தொகுதி உபகரணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை அன்பளிப்புச் செய்யப்பட்டதாக ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் பொலிஸ் சார்ஜன்டுமான என்.எம்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் பங்குபற்றினர்.

சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான கால்பந்துகள் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதென ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தெரிவித்தார்.

ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஒருவர் வெளிநாட்டில் நடைபெறும் கால்பந்துப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .