2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நுவரெலியா பிரதேச சபை கிரிக்கெட் போட்டி

Super User   / 2014 ஜூன் 18 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 14 ஆம் திகதி கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் 16 அணிகள் பங்குபற்றின, இதில் ஏ மற்றும் பி குழுவில் தலா 08 அணிகள் தெரிவுசெய்யப்பட்டு 1ம், 2ம், 3ம் சுற்று போட்டிகள் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் இறுதி சுற்றுக்கு ஏ குழு சார்பாக லக்கி ஸ்டார் அணியும் பி குழு சார்பாக கொட்டகலை கிரிக்கட் கிளப் அணியும்; தெரிவாகின.

இறுதி சுற்றுப்போட்டியானது எதிர்வரும் 22ந் திகதி கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு கோலப்போட்டி, கயிறுத்தல்,; பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளையும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்;டிகளில் வெற்றி பெறுவோறுக்கு பெறுமதியான  பரிசில்களை வழங்கவம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .