2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், சுண்டுக்குளி அணிகள் ஆதிக்கம்

Super User   / 2014 ஜூன் 19 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற பூப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் அணிகளில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயமும் பெண்களில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியும் சம்பியனாகின.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன. 

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும் நடைபெற்று முடிவடைந்த நிலையில் 4 ஆம் கட்டப் போட்டிகள் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

இதில் ஆண்கள், பெண்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டிகள் சென். ஜோன்ஸ் கல்லூரி பூப்பந்தாட்டத் திடலில் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வந்தது.

இதில், 15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் முதலிடத்தினையும் கிளிநொச்சி மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றன.

15 வயதுப்பிரிவு பெண்களுக்கான போட்டியில், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி முதலிடத்தினையும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி இரண்டாமிடத்தினையும் பெற்றன.

19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் முதலிடத்தினையும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மூன்றாமிடத்தினையும் பெற்றன.

19 வயதுப்பிரிவு பெண்களுக்கான போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி முதலிடத்தினையும், யாழ். இந்து மகளிர் கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும் பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X