2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வலிகாமம் பெண்கள் கால்பந்தாட்ட அணி வெற்றி

Super User   / 2014 ஜூன் 29 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட அணிகளிற்கிடையில் இடம்பெற்று வருகின்ற கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின், போட்டியொன்றில் வலிகாமம் கால்பந்தாட்ட அணி வெற்றிபெற்றது.

மேற்படி சுற்றுப்போட்டியின் ஆட்டமொன்று சனிக்கிழமை (28) வடமராட்சி திக்கம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது, இந்த போட்டியில் வடமராட்சி நக்கீரன் விளையாட்டுக் கழக அணியினை எதிர்த்து வலிகாமம் கால்பந்தாட்ட அணி மோதியது.

போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் வலிகாமம் அணியின் எஸ்.சானு முதலாவது கோலினை தனது அணிக்காக அடித்தார்.

இருந்தும், 21 ஆவது நிமிடத்தின் நக்கீரன் அணியின் என்.தர்சினி பதில் கோலினைப் போட்டார். ஆட்டம் சமநிலையில் இருந்த போது, வலிகாமம் அணியின் சானு மேலும் ஒரு கோல் போட்டு தனது அணியினை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதியாட்டத்தில் வலிகாமம் அணி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் வலிகாமம் அணியின் வீராங்கனை எஸ்.பவதாரணி தனது அணிக்கு ஒரு கோல் பெற்றுக்கொடுக்க ஆட்டம் வலிகாமம் அணியின் பக்கம் முழுமையாகச் சாய்ந்தது.  இறுதியில் வலிகாமம் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X