2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஹட்டன் கால்பந்து சம்மேளனத்தின் கால்பந்தாட்ட போட்டிகள்

Super User   / 2014 ஜூன் 29 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ஆர்.ரஞ்ஜன்


ஹட்டன் கால்பந்து சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தலைவர் வெற்றிக் கேடய கால்பந்து போட்டியில், சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 32 அணிகள் பங்குபற்றியதுடன் இறுதி போட்டியில் ஹட்டன் ஸ்ரீபாதியன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.

இறுதி போட்டி சனிக்கிழமை(28)  ஹட்டன் டன்பார் விளையாடடு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் ஹட்டன் ஸ்ரீபாதியன்ஸ் விளையாட்டுக் கழகமும் டிக்கோயா போடைஸ் சன்ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதின. இதில் ஸ்ரீபாதியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஐந்து கோல்களையும் சன்ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஒரு கோலையும் பெற்றுக் கொண்டது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோலை பெற்று சமனிலையில் இருந்தாலும் இரண்டாம் பாதியில் ஸ்ரீ பாதியன்ஸ் மேலும் நான்கு கோல்களை பெற்று 05 - 01 என்ற அடிப்படையில் வெற்றிப் பெற்றனர்.

இப்போட்டியில் ஸ்ரீபாதியன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக கிருஸ்ணக்குமார், கிருஸ்ணா, தர்சன, சமின்த ஆகியோர் கோல்களை பெற்றுக் கொண்டதுடன் சன்ஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் பிரேம்நாத் ஒரு கோலை பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டி தொடரின் சிறந்த விளையாட்டு வீரராக ஸ்ரீபாதியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சமின்த தெரிவு செய்யப்பட்டதுடன் இவ் விளையாட்டுக் கழகத்தின் டி.பிரனாந்து சிறந்த கோல் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதன் போது ஹட்டன் கால்பந்து சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் எட்டு அணிகளுக்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீரங்காவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெறப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான உடைகள் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன்.

இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக சம்மேளனத்தின் தலைவரும் ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தலைருமான டாக்டர் அழகமுத்து நந்தக்குமார் கலந்துகொண்டதுடன் சம்மேளனத்தின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு உயைரயாற்றிய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் அழகமுத்து நந்தக்குமார் தமது சம்மேளனத்தின் அணிகளுக்கு விளையாட்டு வீரர்களுக்கான உடைகளை பெற்றுக் கொடுத்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீரங்காவிற்கு நன்றிகளை தெரிவித்துக்; கொண்டார்.

இதன் போது சம்மேளன அங்கத்துவர்களால் சம்மேளன தலைவரின் சேவையை பாராட்டி நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டது.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X