2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கால்பந்தாட்ட அணிக்குத் தடை விதிப்பு

Super User   / 2014 ஜூலை 01 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    ற.றஜீவன்

பருத்தித்துறைக் கால்பந்தாட்ட லீக்கிற்குட்பட்ட வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக்கழக அணிக்கு 2 வருடங்கள் போட்டித் தடை விதித்ததுடன், வதிரி டயமன்ஸ் அணியின் 2 வீரர்களுக்கு 6 மாதங்களுக்கு போட்டித் தடையும் விதித்து பருத்தித்துறை லீக் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டது.

கால்பந்தாட்டப் போட்டியின் போது கைகலப்பில் ஈடுபட்ட காரணத்தினால் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக லீக் அறிவித்துள்ளது.

வடமராட்சி கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் கடந்த 26ஆம் திகதி நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றில், ஆதிசக்தி விளையாட்டுக்கழத்தினை எதிர்த்து டயமன்ஸ் விளையாட்டுக்கழக அணி விளையாடியது.

இப்போட்டியில் டயமன்ஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டி முடிவடைந்த பின்னர் டயமன்ஸ் அணியின் வீரர்கள் இருவருக்கும் ஆதிசக்தி அணி வீரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் கொண்ட ஆதிசக்தி வீரர்களும், ஆதரவாளர்களும், டயமன்ஸ் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதன் காரணமாக, டயமன்ஸ் அணியின் 4 வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தினை பருத்தித்துறைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட லீக் மேற்கொண்டு வந்தது.

விசாரணைகளின் முடிவில் குறித்த கைகலப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய டயமன்ஸ் அணியின் 2 வீரர்கள், மற்றும் ஆதிசக்தி அணி ஆகியவற்றிற்கு தடையுத்தரவினைப் பிறப்பித்தது உத்தரவிட்டது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X