2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சசிகலா ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டி

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழகத்தினால் சசிகலா ஞாபகார்த்த சாவல் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி சீலாமுனை யங்கஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (29)  நடைபெற்றது.
 
மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழக தலைவர் வி.சுவேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், தொழிலதிபர் எஸ்.ஸ்ரீமயன், சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.நவநேசராஜா, கால்பந்தாட்ட கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏ பிரிவுக்கும், பி பிரிவுக்கும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏ பிரிவு ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 
இங்கு இடம் பெற்ற போட்டியில் முதலாமிடத்தை சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏ பிரிவும், இரண்டாமிடத்தை சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் பி பிரிவும், மூன்றாமிடத்தை மட்டக்களப்பு மைக்கேல்மன் விளையாட்டுக் கழகமும், நான்காமிடத்தை டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது.

வெற்றி பெற்ற கழகங்களுக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப் பரிசில்களை அதிதிகள் வழங்கி வைத்தனர்.
 
மட்டக்களப்பு மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இவ்வருடத்துடன், மூன்றாவது தடவையாகவும் முதலிடத்தை பெற்றுக் கொண்ட சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் சம்பியன் கிண்ணத்தை தன்வசப்படுத்திக் கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X