2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தேசிய கராத்தை சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட மாணவன் தங்கப்பதக்கம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இலங்கை இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவின் கராத்தே சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த மாணவன் எஸ்.பால்ராஜ் சிரேஷ்ட மாணவர்களுக்கான காட்டாவில் தங்கப் பதக்கம் வென்றதோடு 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.
 
கொழும்பு டொறிங்டன் சதுக்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சின் கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டியில் பங்கு பற்றிய போதே இவர் இச்சாதனை படைத்துள்ளார் மேலும், 55கிலோ எடைக்குட்பட்ட கும்டியில் வெங்கலப்பதக்கத்தினையும் தனதாக்கிக்; கொண்டார்.

அமரர் சிகான் கே.இராமச்சந்திரனின் சிஷ்யனான இவருக்கு பயிற்சிகளை கிழக்கு மாகாண பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி வழிகாட்டலின் கீழ் சென்சி எஸ்.முருகேந்திரராஜா வழங்கியமை குறிப்பிடத்தக்காகும். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .