2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கராட்டியில் தங்கம்

Super User   / 2014 ஜூலை 08 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.சுகிர்தகுமார்


இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணம் அம்பாரை, சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.பால்ராஜ், சிரேஷ்ட மாணவர்களுக்கான காட்டாவில் தங்கப் பதக்கம் வென்றதுடன் 2014ஆம் ஆண்டின் சிறந்த கராத்தே வீரருக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.
 
டெல்லியில் டோக்காடோ அரங்கில் ஜூன் மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்ற போட்டியில் அம்பாரை மாவட்டத்தின் ஜே.கே.எம்.ஓ சார்பாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு இவர் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். அமரர் சிகான் கே.இராமச்சந்திரனின் மாணவரான இவருக்குரிய பயிற்சியினை கிழக்கு மாகாண பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி வழிகாட்டலில் சென்சி எஸ்.முருகேந்திரன் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .