2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வீதியோட்டம்

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கையில் சகல பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் 2014ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளின் ஒரு கட்டமான  வீதியோட்டப் போட்டி  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) முதற் தடவையாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளதாக உடற்கல்விப் பிரிவு போதனாசிரியர்  எம்.எல்.ஏ.தாஹீர்; தெரிவித்தார்.

இப்போட்டியினை தென்கிழக்குப் பலக்லைக்கழக உப வேந்தர் கலாநிதி எம்.எம்.முகம்மது இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இலங்கையின் 14 பல்கலைக்கழகளுக்கிடையில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து ஏழு பேர் வீதம் 98 போட்டியாளர்கள் கலந்துகௌ;ளவுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இப்போட்டியானது அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் நிறைவு பெறவுள்ளது.

இப்போட்டி 10 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டதாக நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் இப்போட்டியினை மொறட்டுவ பல்கலைக்கழகம் நடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X