2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சாரணர் பயிற்சி பாசறை

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்ஜன்

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த 15 பாடசாலைகளின் 200 சாரணர்கள் பங்கு கொண்ட பயிற்சி பாசறை ஒன்று சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஹட்டன் டிக்கோயா தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வதிவிட பாசறையாக இப்பயிற்சி நடைபெற்றது. சாரணர்களை அடுத்த கட்டத்திற்கு தயார் செய்வதற்கான முன்னோடி பாசறையாக இது அமைந்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

அங்கத்துவ சின்னம், சாரணர் விருது என்பவற்றை பெற்றக் கொள்வதற்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த மாணவர்களுடன் அவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கு பற்றினர்.

இந்த பாசறையின் செயற்பாடுகளை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டதுடன் இந்த பயிற்சி பாசாறையில் பங்கு பற்றிய பாடசலைகளில் ஐந்து பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக ஐந்து கூடாரங்களை வழங்க தாம் ஏற்பாடு செய்வதாகவும் பின்பு ஏனைய பாடசாலைகளுக்கும் பெற்றுக் கொடுக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த பாசறையில் பங்கு பற்றிய சாரணர்களில் அதிகமானவர்கள் பெருந்தோட்ட துறைசார்ந்த பாடசாலை மாணவர்களாக காணப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .