2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இறுதிப் போட்டிக்கு திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் தகுதி

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


அகில இலங்கை கால்பந்தாட்ட ‘பிரமியர் லீக் ஏ டிவிசன்’  போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றது.

கண்டி போகம்பறை மைதானத்தில் கண்டி ஹைலய்ன்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் திஹாரிய யூத் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை(13)  மாலை  இடம்பெற்ற அரை இறுதி போட்டியை 4:0 என்ற புள்ளி வித்தியாசத்தில் திஹாரிய அணி வெற்றிபெற்றது.

போட்டி ஆரம்பமாகி 25 ஆவது நிமிடத்தில் கம்பஹா மாவட்ட திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் சார்பாக விளையாடும் வெளிநாட்டுப் பிரஜையான மஜி ஹைஜென்ஸ் பெனல்டி மூலம் ஒரு கோலைப் பெற்றார்.

இடைவேளையை அடுத்து மைதானத்தில் இடைக்கிடை சலசலப்புக்கள் ஏற்பட்டதுடன் போட்டி ஒரு பக்கமாக நகர ஆரம்பித்தது.

திஹாரிய அணி வீரர் ஹபீல் மொகமட் மற்றும் மைதானத்தில் மிகவும் பிரகாசமாகத் துலங்கிய வெளிநாட்டு வீரரான மஜீ ஹைஜென்ஸ் ஆகியோர் தமது அணிக்காக மேலும் ஒவ்வொறு கோலைப் புகுத்த மொத்தம் 4:0 என்ற அடிப்படையில்  திஹாரிய யூத் அணி வெற்றிபெற்றது.

போட்டி முடிய மத்தியஸ்த்தர்கள் மற்றும் எல்லைக் கோடு கண்காணிப்பாளர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது கண்டி ரசிகர்களது கடும் எதிர்ப்பு காரணமாக போட்டி மத்தியஸ்தர் சிறுதாக்குதலுக்கு உள்ளானார்.

சக அதிகாரிகளினால் மத்தியஸ்தர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .