2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வெபர் கூடைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம்

Super User   / 2014 ஜூலை 14 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.எஸ்.எம்.நூர்தீன்


அருட் தந்தை வெபர் அடிகளாரின் நினைவாக மட்டக்களப்பு மைக்கல் மென் விளையாட்டுக்கழகம் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடாத்திய இருபதாவது வெபர் வெற்றிக்கிண்ணத்திற்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்றது.
 
டயலொக் விளையாட்டுக்கழகம், இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்ட அணி, மற்றும் இலங்கை பொலிஸ் அணி, மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக்கழகம், மைக்கலைட் விளையாட்டுக்கழகம், மைக்கல்மென் விளையாட்டுக்கழகம் ஆகிய ஆறு கழகங்கள் பங்கு பற்றிய கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி வெள்ளிக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை (13) மாலை நிறைவு பெற்றது.
 
இதன் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மைக்கல் மென் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்ட அணி விளையாடியது.
 
இதன் போது  இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்ட அணி 76 புள்ளிகளையும், மட்டக்களப்பு மைக்கல் மென் அணி 63 புள்ளிகளையும் பெற்றது. இதில் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்றது.
 
இதன் பரிசளிப்பு வைபவத்தில் ஜேசு சபையின் அருட்தந்தை ஜோசப் மேரி, மற்றும் மைக்கல் மென் விளையாட்டுக்கழகத்தின் போசகர் அருட்தந்தை போல் சற்குணநாயகம், மற்றும் திருமதி பி.எஸ்.ஜெயராஜ் உட்பட முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள், மைக்கல் மென் விளையாட்டுக்கழகத்தின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X