2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

டெனிஸ் விளையாட்டு மேசை அன்பளிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 16 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


அமெரிக்கத் தமிழ் சங்கத் தலைவரும் சிறுநீரக பொது வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி கந்தையா ராஜாராம் மற்றும் அவரது துணைவியார் வைத்திய கலாநதிதி சுகந்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை (15)  ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து மாணவர்களுக்காக டெனிஸ் விளையாட்டு மேசையை அன்பளிப்பாக வழங்கினர்.
 
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் சமீபத்தில் இடம்பெற்ற டேபிள் டென்னிஸ் போட்டிகளில் நான்கு இடங்களிலும் சம்பியன் பட்டத்தை வென்று கிழக்கு மாகாணத்தில் சரித்திரம் படைத்துள்ள ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் இதுவரை சொந்தமாக டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான ஒரு மேசை கூட இல்லாத நிலையில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிலையில் அமெரிக்கத் தம்பதியினர் மேற்படி பாடசாலைக்கு விஜயம் செய்து இந்த அன்பளிப்புக்களை வழங்கியதாக பாடசாலை அதிபர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் சம்பியன்ஸிப் போட்டிகள் ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்திற்கும் திருகோணமலை புனித சென்ற் மேரிஸ் கல்லூரி, மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு வின்சன்ற் தேசியக் கல்லூரி, அக்கரைப்பற்று மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கிடையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இறுதியில் 19 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவு மற்றும் 15 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவுகள் ஆகிய நான்கு பிரிவுகளிலும் ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் சம்பியன் இடத்தைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் சரித்திரத்தைப் பதித்துக் கொண்டது.
 
இந்தப் பாடசாலை 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண மட்டத்தில் 2 சம்பியன்களையும், 2013 ஆம் ஆண்டு 3 சம்பியன்களுக்கான விருதுகளையும், 2014 ஆம் ஆண்டு 4 சம்பியன்களையும் தனதாக்கி சரித்திரம் படைத்துள்ளது.
 
சென்ற ஆண்டு தேசிய மட்டத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கிடையில் இடம்பெற்ற பூப்பந்தாட்டப் போட்டிகளில் ஐயங்கேணி தமிழ் வித்தியாலய மாணவி கே.நிஸாந்தினி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் சசேந்திர சிவகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.லவாகரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியம், அமீரலி வித்தியாலய அதிபர் எஸ்.அப்துல் கபூர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .