2025 நவம்பர் 19, புதன்கிழமை

மல்யுத்த போட்டிக்கான ஏற்பாடு

Super User   / 2014 ஜூலை 17 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


- க.ருத்திரன்
, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2014 ஆம் அண்டிற்கான மல்யுத்த போட்டி நிகழ்சி எதிர்வரும் 20.07.2014 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக விளையாட்டுக் குழு ஆலோசனை சபை தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.ரவி இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

இப்போட்டி நிகழ்சியில் இலங்கையிலுள்ள அனைத்து (14) பல்கலைக்கழகங்களும் பங்கு பற்றவுள்ளதாகவும் இப்போட்டியில் பங்கு பற்றும் வீரர்களின் உடற் தகுதிகாண் நிகழ்வு எதிர்வரும் 19.07.2014 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா மற்றும் விசேட அதிதியாக பதிவாளர் க.மகேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

வரலாற்றில் முதற் தடவையாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ் மல்யுத்த நிகழ்ச்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாட்டு நிகழ்வுகள் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X