2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Kanagaraj   / 2014 ஜூலை 19 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் அணிக்கு அறுவர் கொண்ட ஜனாதிபதி சவால் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஒன்றிணைந்து கிழக்கைக் கட்டியெழுப்புவோம் எனும் வேலைத் திட்டத்தின் கீழ் நீலப்படை, கிழக்கு மாகாண அபிவிருத்தி மன்றம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பெறுமதியான பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இறுதிப் போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு ஜனாதிபதி சவால் கிண்ணத்துடன், 3 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தினைப் பெறும் அணிக்கு 2 இலட்சம் ரூபாயும், மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொள்ளும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

இச்சுற்றுப் போட்டிக்காக விண்ணப்பிக்கும் இறுதித் திகதி எதிர்வரும் 25ஆம் திகதியாகும். இது தொடர்பான மேலதிக விபரங்களையும், விண்ணப்பப் படிவங்களையும் பிரதேச செயலகங்களில்; கடமையாற்றும் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .