2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

படுவான் சமர் : கஜமுகா அணி முதலிடம்

Super User   / 2014 ஜூலை 22 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல் சக்திவேல்


கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்திய படுவான் சமர் 2014 கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின்  இறுதிப்போட்டி  ஞாயிற்றுக்கிழமை (20)  கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (19) ஆரம்பமான இச் சுற்றுப்போட்டியில் படுவான்ரைப் பிரதேசத்தைச்சேர்;ந்த 33அணிகள் பங்கேற்றிருந்தன.  இறுதிப்போட்டியில்  பனையறுப்பான் கஜமுகா அணியினரும் முதலைக்குடா விநாயகர் அணியினரும் மோதிக்கொண்டதுடன் இப் போட்டியில் 01:00 என்ற கோள்கள் கணக்கில் முதலைக்குடா விநாயகர் அணியினர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர். இதன் போது வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக்கிண்ணமும் பரிசில்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர் அகிலேஸ்வரன், கிராம அமைப்புக்களின்  பிரதிநிதிகள் என பலர்  கலந்து சிறப்பித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .