2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினரின் கால்பந்தாட்டப் பயிற்சி முகாம்

Super User   / 2014 ஜூலை 24 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகமும் ஜக்கிய அமெரிக்க நாட்டின்  கால்பந்தாட்ட வெளிவாரி சேவை நிறுவனமும் இணைந்து 21 ஆம் திகதி முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடத்திய பயிற்சி முகாமில் படை வீரர்கள்,  யாழ்ப்பாணம், வலிகாமம் மற்றும் தீவகத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்களும் கலந்துகொண்டனர்.

மூன்று நாட்கள் கொண்ட இந்தப் பயிற்சி முகாமில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் பயிற்சி முகாமினை அமெரிக்க நாட்டைச் சோந்த பயிற்றுவிப்பாளர்களான கிறேச் டேவில், மத்தியு வில்மன், சாளிஸ் சாள்ஸ் ஜோன்சன், றொட்னி பீற்றர்சன் அவன்டேவிஸ் ஆகியேர்  நடத்தினர்.

பயிற்சி நெறி முடிவில் குருநாகல் தெரிவு அணியும் யாழ்ப்பாணம் தெரிவு அணியும் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் நேற்று புதன்கிழமை (23) விளையாடினர்.

இந்தப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்கள் பெற்றமையினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

நேற்றய இறுதி நாள் நிகழ்வில் பிரிகேடியர் திருநாவுக்கரசு, மேஜர்ஜெனரல் பிரியந்த ஜெயசுந்தரா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி முகாமில் கலந்துகொண்ட வீரர்களின் கழகங்களுக்கு பந்துகளை வழங்கிவைத்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .